பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2008 முதல் 2013 வரை அதிபராக இருந்தார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்த பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தன. அப்போது பிலாவல் பூட்டோ 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது இந்த இரு கட்சிகளும் தேர்தலில் நேருக்கு நேர் மோத உள்ளன. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவிக்கப்பட்டுள்ளார்.