காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

மாநிலத்தில் முதன் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் பறவை காய்ச்சல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இது வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மனிதர்களை தாக்காது என கருதப்பட்ட வந்த நிலையில் பறவை காய்ச்சலால் 59 வயது […]

மாநிலத்தில் முதன் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் பறவை காய்ச்சல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இது வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மனிதர்களை தாக்காது என கருதப்பட்ட வந்த நிலையில் பறவை காய்ச்சலால் 59 வயது நபர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கேரளாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு ஆலப்புழா மாவட்டம் முகம்மது கிராமத்தில் மொத்தமாக காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து காகங்களை உடல் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu