அக்டோபர் 1 முதல் பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 2023 நடைமுறைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழை தனி அடையாள ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சட்டம் 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுனர் உரிமம், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேர என அனைத்திலும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம். மேலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.