டிசம்பர் 16 அன்று, சிங்கப்பூர் சந்தையில் பிட்காயின் வரலாறு காணாத உயர்வான $106,000 ஐ பதிவு செய்தது. இதன்மூலம் டிசம்பர் 5 அன்று பதிவு செய்த $100,000 ஐ கடந்து புதிய உச்சநிலையை அடைந்துள்ளது. Ether, XRP, Dogecoin உள்ளிட்ட மற்ற கிரிப்டோ டோக்கன்களும் இன்று லாபம் அடைந்தன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரியில் தனது இரண்டாவது பதவிக் காலத்தை தொடங்க உள்ளார். அப்போது, பிடென் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மாற்றி, டிஜிட்டல் சொத்துக்களுக்கு உகந்த விதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். கிரிப்டோ சந்தைக்கு சாதகமான அவரது ஆட்சி மனோபாவம், பிட்காயின் சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர். டிரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் மையப்படுத்தப்பட்ட பங்கு பரிவர்த்தனை நிதிகள் (ETFs) $12.2 பில்லியன் நிகர முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதேபோல், ஈதர் மையப்படுத்தப்பட்ட ETFs $2.8 பில்லியன் முதலீடுகளை பெற்றுள்ளன.