அமெரிக்காவைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி நிறுவனமான ‘பிட்ஃபிரண்ட்’ தனது செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி துறையில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ளதால், தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘பிட்ஃபிரண்ட்’ அறிவித்துள்ளது. வரும் 2023 மார்ச் 31ஆம் தேதி வரையில், வாடிக்கையாளர்கள் தங்களது முதலீடுகளையும் சேமிப்புகளையும் திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
‘பிட்ஃபிரண்ட்’ கிரிப்டோகரன்சி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்க சந்தையில், பிட்காயின், ஈத்தரியம், லிங்க் போன்றவற்றுக்கு போட்டியாக இது இருந்தது. கிரிப்டோகரன்சி துறையில், நெடுநாட்களாக கரடியின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளதால், பல்வேறு கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. அந்த வரிசையில் ‘பிட்ஃபிரண்ட்’ இணைந்துள்ளது. அண்மையில், தவறான செயல்பாடுகள் காரணமாக நிறுத்தம் செய்யப்பட்ட கிரிப்டோகரன்சிகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.














