பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக

April 15, 2024

பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏழு கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்து வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் கடந்த சில தினங்களுக்கு […]

பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏழு கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்து வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தற்போது பாஜக, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜினாத் சிங்,அமித்ஷா முன்னிலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மோடி கேரண்டி என்ற பெயரில் வெளியான இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu