ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஆன ரத்தன் லால் கட்டாரியா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஆவார். மேலும், தொடர்ந்து 3 முறை எம்பி யாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், 71 வயதாகும் அவர், ஹரியானாவின் அம்பாலா தொகுதி எம்பி யாக உள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 3:30 மணி அளவில் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா மாநில முதல்வர் கட்டார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.














