பாராளுமன்ற தேர்தலுக்கான பத்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக சார்பில் பத்தாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு புதிய வேட்பாளரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.