ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு

October 13, 2022

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் உள்பட பலா் கர்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் […]

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் உள்பட பலா் கர்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பா் 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.

அப்போது மூத்த நீதிபதி ஹேம்நாத் குப்தா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும், நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் இந்த வழக்கானது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu