அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு நிறுவனமான பிளாக் ராக், பிரிட்டனைச் சேர்ந்த Preqin என்ற தனியார் தரவு நிறுவனத்தை வாங்குகிறது. கிட்டத்தட்ட 2.5 பில்லியன் யூரோக்கள் அல்லது 3.2 பில்லியன் டாலர்கள் தொகைக்கு இந்த நிறுவனம் வாங்கப்படுகிறது. இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Preqin நிறுவனத்தை வாங்குவதன் மூலம், பிளாக் ராக் நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைகள் 2024-ம் ஆண்டின் இறுதியில் முழுமையாக நிறைவு பெறும் என கூறப்படுகிறது.