அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளை மீறியதால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து இஸ்ரேல் காசா மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக கதார், எகிப்து மற்றும் அமெரிக்க நாடுகள் செயல்பட்டன. ஆனால்ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்த துவங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளை மீறியதால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், இடைநிறுத்தம் ஏற்பட்ட பிறகு பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி இருந்தோம். போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்பின் காரணமாக முடிவுக்கு வந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே ஜெருசலேமில் தாக்குதல் நடத்தி மூன்று பேரை கொன்றனர். அதுமட்டுமின்றி ராக்கெட்டுகளை வீசத் தொடங்கினர். சில பிணைய கைதிகளை விடுவிக்க மறுத்தனர் என்று தெரிவித்தார்.
நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை காலை தொடங்கியது. அதில் சுமார் 180 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.














