அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பளிங்கன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்தார்.இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு இடையே இன்றோடு ஒரு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் இதுவரை பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்று அடைந்தார். அங்கு அவர் தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்திற்கு சென்றார். அங்கு அவர் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகுவை சந்தித்து ,'உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளும் அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். என்றபோதிலும், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாக போராட வேண்டியதில்லை. இந்த போர் சூழலை பயன்படுத்திக்கொண்டு இஸ்ரேல் மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், அதனை அமெரிக்கா பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்று கூறினார்.














