புளூ வைரஸ் காய்ச்சல் பரவல் சிறுவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்து வருகிறது.
பருவ மழை காலத்தில் பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவது சாதாரணம். ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'புளூ' வைரஸ் காய்ச்சல் பெரிதும் பரவியுள்ளது. கடந்த அக்டோபரில் இதன் பாதிப்புகள் அதிகரித்தன. தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. குறிப்பாக, சென்னையில் இந்த வைரஸ் காய்ச்சல் மிகவும் பரவிவரும் நிலையில், அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகின்றனர்.
நோயின் பரவலை தடுக்கும் வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். 3 முதல் 5 நாட்களில் இந்த காய்ச்சல் குணமடையும், ஆனால் தடுப்பூசி போட்டவர்கள் அதை எளிதாக சமாளிக்க முடியும்.