முன்னாள் ட்விட்டர் தலைவர் ஜாக் டோர்சியின் 'ப்ளூ ஸ்கை' செயலி - ஆப் ஸ்டோரில் வெளியீடு

March 1, 2023

ட்விட்டர் நிறுவனத்தின் தோற்றுநர் ஜாக் டோர்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதன் பின்னர், ட்விட்டருக்கு மாற்றாக அதே போன்ற மற்றொரு தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ப்ளூ ஸ்கை என்று பெயரிடப்பட்டிருந்த அந்த தளம் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் வெளிவந்துள்ளது. எனினும், இது பரிசோதனை அடிப்படையில் வெளிவந்துள்ளதால், பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளம் விரைவில் பொதுமக்களுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ப்ளூ ஸ்கை தளத்திற்கு, சுமார் 13 மில்லியன் டாலர்களை […]

ட்விட்டர் நிறுவனத்தின் தோற்றுநர் ஜாக் டோர்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதன் பின்னர், ட்விட்டருக்கு மாற்றாக அதே போன்ற மற்றொரு தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ப்ளூ ஸ்கை என்று பெயரிடப்பட்டிருந்த அந்த தளம் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் வெளிவந்துள்ளது. எனினும், இது பரிசோதனை அடிப்படையில் வெளிவந்துள்ளதால், பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளம் விரைவில் பொதுமக்களுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ப்ளூ ஸ்கை தளத்திற்கு, சுமார் 13 மில்லியன் டாலர்களை ஜாக் டோர்சி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, ஆப் ஸ்டோரில் ப்ளூ ஸ்கை வெளியானது. அதிலிருந்து இதுவரை 2000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. எளிமையான தோற்றத்துடன் இந்த செயலி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இதில் 256 எழுத்து வரம்புக்குள் பதிவுகளை இட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புகைப்படங்களையும் இணைத்துக் கொள்ள வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, பதிவுகளை ஷேர் செய்வது, கணக்குகளை மியுட், பிளாக் செய்வது போன்ற அம்சங்களும் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu