கியா வாகன நிறுவனத்தின் லீஸ் திட்டம் அறிமுகம்

May 20, 2024

கியா வாகன நிறுவனம், தனது புதிய வாகனங்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கியா லீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், நிதி பற்றாக்குறை காரணமாக கியா வாகனத்தை தவிர்க்கும் பெரும்பாலான இந்தியர்களிடம் கியா நிறுவனத்தின் வாகனங்கள் கொண்டு சேர்க்கப்படும் என கருதப்படுகிறது. கியா லீஸ் திட்டத்திற்காக, ஒரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனத்துடன் கியா நிறுவனம் கூட்டணியில் இணைந்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கியா நிறுவனத்தின் வாகனங்களை ஓரிக்ஸ் நிறுவனம் […]

கியா வாகன நிறுவனம், தனது புதிய வாகனங்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கியா லீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், நிதி பற்றாக்குறை காரணமாக கியா வாகனத்தை தவிர்க்கும் பெரும்பாலான இந்தியர்களிடம் கியா நிறுவனத்தின் வாகனங்கள் கொண்டு சேர்க்கப்படும் என கருதப்படுகிறது.

கியா லீஸ் திட்டத்திற்காக, ஒரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனத்துடன் கியா நிறுவனம் கூட்டணியில் இணைந்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கியா நிறுவனத்தின் வாகனங்களை ஓரிக்ஸ் நிறுவனம் குத்தகைக்கு விடும். கியா சொனட், கியா செல்டாஸ், கியா காரன்ஸ் போன்ற வாகனங்களை 24 முதல் 60 மாதங்கள் வரை ஒருவர் லீஸ் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை குத்தகை பணமாக செலுத்த வேண்டும். சொனட் காருக்கு 21900, எஸ்யூவி மற்றும் எம் பி வி வாகனங்களுக்கு 29000 ரூபாய் மாதாந்திர குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu