சீனாவில் 7 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பி எம் டபிள்யூ

October 22, 2024

பி எம் டபிள்யூ (BMW) நிறுவனம் சீனாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அரிப்பு மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள குறைபாடுள்ள கூலன்ட் பம்ப் பிளக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ந்த திரும்பப் பெறுதல், 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4,99,539 கார்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 1,88,371 கார்களை உள்ளடக்கியது. இந்த திரும்பப் பெறுதல் செயல்முறை வரும் மார்ச் […]

பி எம் டபிள்யூ (BMW) நிறுவனம் சீனாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அரிப்பு மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள குறைபாடுள்ள கூலன்ட் பம்ப் பிளக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ந்த திரும்பப் பெறுதல், 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4,99,539 கார்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 1,88,371 கார்களை உள்ளடக்கியது. இந்த திரும்பப் பெறுதல் செயல்முறை வரும் மார்ச் 2025 முதல் தொடங்கப்படும்.

சீனாவில், கடந்த காலாண்டில் பி எம் டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை 30% சரிவடைந்த நிலையில் இந்த திரும்பப் பெறுதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த குளிரூட்டும் பம்ப் குறைபாட்டை சரி செய்ய சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைபாடு ஐரோப்பாவில் உள்ள BMW கார்களை பாதிக்கவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், குறைபாடுள்ள பிரேக்குகள் காரணமாக உலகளாவிய அளவில் 1.5 மில்லியன் BMW கார்கள் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu