மோசமான படகுப் பயணங்களால், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 193 பேர் உயிரிழந்தனர். முதல் விபத்து, வியாழக்கிழமை மாலை ஈக்வேட்டர் மாகாணத்தில் உள்ள காங்கோ ஆற்றில் நிகழ்ந்தது. சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 107 பேர் உயிரிழந்தனர். சுமார் 209 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதற்கு ஒரு நாள் முன்னதாக, அதே மாகாணத்தில் மற்றொரு படகு விபத்து நடந்தது. இரவில் அதிக சுமையுடன் பயணம் செய்த படகு விபத்துக்குள்ளானதில், 86 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். காங்கோவில் சாலை வசதிகள் குறைவாக இருப்பதால், மக்கள் பெரும்பாலும் மலிவான படகு பயணங்களையே நம்பியுள்ளனர். இந்த விபத்துக்கள் நாட்டின் போக்குவரத்து பாதுகாப்பைக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.