டெலிகிராம் செயலிக்கு பிரேசில் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த தடை தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் பள்ளிகளில் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 12 வன்முறை சம்பவங்கள் பள்ளி பகுதிகளில் நடந்துள்ளன. அதில் ஒரு முறை, தாக்குதல் நடத்திய நபர் அவரது சட்டையில் 'ஸ்வஸ்திக்' குறியீட்டை கொண்டிருந்தார் என்பதால், நாசி தொடர்பான குரூப் சாட் விவரங்களை காவல்துறை கோரி இருந்தது. குறிப்பாக, neo-Nazi சாட் குறித்த தகவல்களை டெலிகிராமில் இருந்து காவல்துறை கேட்டிருந்தது. இந்த தகவல்களை அளிக்க மறுத்ததால், பிரேசில் நீதிமன்றம், செயலிக்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. "விசாரணை செய்ததில், டெலிகிராம் நிறுவனம் காவல்துறைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இந்த செயலியை தடை செய்ய கோரி தெரிவிக்கப்படுகிறது" என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.