டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் வெடிவிபத்து ஏற்பட்டது.
டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை 7.47 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர்சேதம் எதுவும் இல்லை. இதையடுத்து, தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, வெடிவிபத்திற்கான காரணத்தை ஆராய்கின்றனர். சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அருகிலுள்ள கார்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.