சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.