மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
அமெரிக்காவில் மியாமி ஒபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை விளையாடியது. இதில் எதிரணியில் ஸ்பெயினின் மார்செல் கிரானொலர்ஸ், அர்ஜென்டினாவின் ஹோராசியோ ஜெபலோஷ் இணை எதிர்கொண்டது. இதில் முதல் ஆட்டத்தில் இருந்து அபாரமாக செயல்பட்ட போபண்ணா ஜோடி 6-1,6- 4 என்ற நேர் செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது