இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். தற்போது இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடம்பெற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.