இத்தாலியில் ஏ.டி.பி எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்று நடைபெற்று வருகிறது.
டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடம் பிடிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏ.டி.பி எனப்படும் இறுதி சுற்று ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வீரர்கள் கிரீன், ரெட் என இருவகையாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றனர். ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யானிக் சின்னர் டென்மார்க் வீரர் சோல்ஜர் ரூனேவை வீழ்த்தி வெற்றியுடன் முதலிடம் மற்றும் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடமும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர். மேலும் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபண்ணா - ஆஸ்ட்ரேலியாவை சேர்ந்த மேத்யூ எப்டன் ஜோடி நெதர்லாந்தை சேர்ந்த
வெஸ்லி கோல்ஹோப் - நீல் ஸ்குப்ஷ்கி அணியை வீழ்த்தியது. லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் ஆன ராஜீவ் ராம் - சாலிஸ்பரி, போபண்ணா மேத்யூ ஜோடிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.