ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரோவண்ணாவிற்கு ஆறு நாட்கள் போலீஸ் காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்பி ஆன பிரஜ்வல் ரோவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் மீது அவருடைய வீட்டு பணிப்பெண் உட்பட்ட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் ஜெர்மனிக்கு தப்பு ஓடினார்.மேலும் அவர் மீது ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதனிடையே அவர் ஜெர்மனியில் இருந்து பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் வந்திருந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் ஆறு மணி நேரத்திற்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் பெங்களூர் அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பெங்களூர் நகர சிவில் மற்றும் செசன் நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வருகிற ஆறாம் தேதி வரை ஆறு நாட்கள் எஸ்.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து இவரை சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்














