தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக காஷ்மீரின் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பல்வேறு நபர்களுக்கு சம்பந்தம் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநகர், அவந்திபோரா, புல்வாமா, குல்காம் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது இசாக் அகமது பட் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.