காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் சூழல் வந்துள்ளது.அமேசான் காடுகள் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுக்களை சுத்திகரித்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வருகிறது. இந்த காடுகளின் 60 சதவீதம் தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டுத்தீ பரவியது. அப்போது இந்த காடுகள் பலத்த சேதம் அடைந்தன. அதன் பின்பு மழையும் பொய்த்துப்போனது. அங்குள்ள அணைகளின் கொள்ளளவு குறைந்து வருகிறது. இதனால் அங்கு வரும் காலங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பிரேசில் மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுவர் என அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 166 கோடி ரூபாய் செலவு செய்து நீர் நிலைகளை பாதுகாக்க அரசு முடிவு எடுத்துள்ளது.