அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி சுமார் 31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை குழந்தைகளின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளும் விரிவு படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என அரசு வக்கீல் தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.