பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய 6 நாடுகளுக்கு அழைப்பு

August 24, 2023

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், மேலும் சில நாடுகளை இணைத்துக் கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளுக்கு முழு நேர உறுப்பினர்களாக இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் BRIC கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்காவை இணைத்து 5 நாடுகளாக - BRICS என்றானது. அதன் பிறகு, […]

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், மேலும் சில நாடுகளை இணைத்துக் கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளுக்கு முழு நேர உறுப்பினர்களாக இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் BRIC கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்காவை இணைத்து 5 நாடுகளாக - BRICS என்றானது. அதன் பிறகு, தற்போது தான் கூட்டமைப்பின் விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 2024 ஜனவரி 1ம் தேதி முதல், இந்த 6 நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக சேர்க்கப்படும் என கூறியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கத்திற்கு அதன் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu