ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு பத்தாயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றார். அப்போது அவர் அதிபர் ஜென்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது ரஷ்யாவிற்கு எதிராக போரிட பத்தாயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என்ற கிராண்ட் ஷாப்ஸ் கூறினார். ஏற்கனவே ட்ரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்திருந்தது. தற்போது 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் கப்பல்களை குறி வைத்து தாக்கும் ட்ரோன்கள் ஆயிரம் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் கப்பல்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த இங்கிலாந்தின் ஆயுதங்கள் தற்போது பயன்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் மூன்று கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைன் அழித்துள்ளது.