கடந்த 1884 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பா கண்டத்தில் மிகவும் வெப்பமான ஜூன் மாதமாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிலவி உள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் இது வரலாற்று வெப்பமான ஜூன் மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் வானிலை மையம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், பிரிட்டனின் சராசரி வெப்பநிலை 15.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
மேலும், பிரிட்டன் தவிர 72 நாடுகள், 1957 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் வெப்பமான ஜூன் மாதத்தை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, இது இயற்கையாக ஏற்பட்ட மாற்றங்களை தாண்டி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவு என்று பிரிட்டன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டனின் சராசரி மழை அளவில் 68% மட்டுமே ஜூன் மாதம் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. அத்தோடு, 2050 ஆம் ஆண்டுக்குள், பிரிட்டனின் சராசரி வெப்பநிலை 14.9 டிகிரி செல்சியஸ்-ஐ தாண்டும் வாய்ப்பு 50% ஆக உயரும் என கூறியுள்ளது.