மத்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிரிட்டானியா சுயாதீன இயக்குனராக நியமனம்

July 3, 2024

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான உர்ஜித் பட்டேல் என்பவரை பிரிட்டானியா நிறுவனம் நிர்வாக குழுவில் இணைத்துள்ளது. கடந்த 2016 முதல் 2018 வரை மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் பட்டேல் பதவி வகித்தார். இந்த நிலையில், பிரிட்டானியா நிறுவனத்தின் சுயாதீன இயக்குநராக கூடுதல் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார் என பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி […]

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான உர்ஜித் பட்டேல் என்பவரை பிரிட்டானியா நிறுவனம் நிர்வாக குழுவில் இணைத்துள்ளது.

கடந்த 2016 முதல் 2018 வரை மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் பட்டேல் பதவி வகித்தார். இந்த நிலையில், பிரிட்டானியா நிறுவனத்தின் சுயாதீன இயக்குநராக கூடுதல் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார் என பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ள பிரிட்டானியா நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பின்போது, நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இவரை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரிட்டானியா நிறுவனம், உர்ஜித் பட்டேல் உடன் சேர்த்து சுனில் லால் பாய் என்பவரை அதுல் லிமிடெட் நிறுவனக் கிளையின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu