புருனே நாட்டு இளவரசர் மாட்டீன், சாமானிய பெண் ஒருவரை மணம் புரிந்துள்ளார். அவரது திருமண கொண்டாட்டம் 10 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான திருமணம் நேற்று நிகழ்ந்தது.
புருனே நாட்டு இளவரசர் மாட்டீன், அரச குடும்பத்தைச் சாராத அனிஷா ரோஸ்னா இஷா கேள்பிக் என்ற பெண்ணை திருமணம் புரிந்துள்ளார். இளவரசருக்கு 32 வயது ஆவதாகவும், அனிஷாவுக்கு 29 வயது ஆவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள் ஜனவரி 16 வரை நடைபெறுகின்றன. புருனே அரச குடும்பம் சர்வதேச அளவில் பணக்கார வம்சம் ஆகும். அரசு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இளவரசர் மாட்டீன் அரியணை ஏற விருப்பம் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சமூக ஊடகங்களில் அவரை எண்ணற்ற பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.