தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக சிரத்தா தவிசின் தேர்வு

August 23, 2023

கடந்த மே மாதம், தாய்லாந்து நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, அந்நாட்டின் புதிய பிரதமராக சிரத்தா தவிசின் அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 500 உறுப்பினர்களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாததால், இழுபறி நிலை இருந்து வந்தது. மூவ் பார்வேர்ட் கட்சி மற்றும் பியூ தாய் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையே போட்டி நிலவியது. தற்போது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் யுனைடெட் தாய் நேஷன், தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளதால் […]

கடந்த மே மாதம், தாய்லாந்து நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, அந்நாட்டின் புதிய பிரதமராக சிரத்தா தவிசின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 500 உறுப்பினர்களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாததால், இழுபறி நிலை இருந்து வந்தது. மூவ் பார்வேர்ட் கட்சி மற்றும் பியூ தாய் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையே போட்டி நிலவியது. தற்போது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் யுனைடெட் தாய் நேஷன், தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளதால் ஆட்சி அமைக்கும் போட்டிக்குள் நுழையவில்லை. அந்த வகையில், பியூ தாய் கட்சி, தாய்லாந்து ஆட்சி பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளதால், இதர கட்சிகள் அதனுடன் கூட்டணியில் இணைந்துள்ளன. அதன்படி, பியூ தாய் கட்சியை சேர்ந்த சிரத்தா தவிசின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில், 60 வயதாகும் தவிசின், தாய்லாந்தின் 30 வது பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 … 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu