உலக அளவில், செலவுகளைக் குறைக்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் வரவால், பல்வேறு பணியிடங்கள், மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. அதன்படி, செயற்கை நுண்ணறிவுக்கு மாற்றமடையும் விதத்தில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 55000 பணியிடங்களை நீக்க உள்ளதாக பிரிட்டனின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பிடி அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் தற்போதைய ஊழியர்கள் எண்ணிக்கையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
பிடி நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிலிப் ஜென்சன், இந்த குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். "நாட்டில் பைபர் கேபிள் நெட்வொர்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு, நிறுவனத்தின் பணிகள் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் கட்டமைப்பை எளிமையாக்க முயற்சிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.