2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை வலுப்படுத்த எங்களுடைய அரசு சீராக பணியாற்றி வருகிறது. கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க அரசு மேற்கொண்டு வரும் எந்தவொரு திட்டம் என்றாலும், அதனை நம்முடைய பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றன. 2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடானது, ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு இருந்தது என்று அவர் கூறினார்.