மின் இணைப்பு பெறுவதற்கு இனி கட்டிட நினைவு சான்றிதழ் தேவை இல்லை என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு பணி நிறைவுச் சான்றிதழ், அனைத்து விதிகளையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே வழங்கப்படும். ஆனால் இதனை பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்து வந்த நிலையில் தமிழக அரசு சில குறிப்பிட்ட அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்திருந்தது. அதேபோன்று வணிக கட்டங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிடப் பணி நிறைவுச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் நிலை இருந்து வந்தது. தற்போது இது தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இனி மின் இணைப்பு பெறுவதற்கு கட்டிட சான்றிதழ் தேவை இல்லை என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.