தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ₹420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் தமிழகத்தில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழகத்தில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.