வணிக வரித் துறையில் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது.
இதுகுறித்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், வணிக வரி துறையில் நிலுவை வரிகளை செலுத்தி, தீர்வு காண வணிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒருமுறை திட்டமான சமாதான திட்டத்தை முதலில் கடந்த 1999-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். பின்னர், 2002, 2006, 2008, 2010, 2011-ம் ஆண்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது வரி நிலுவையாக, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இனங்களில் ரூ.16,732.39 கோடி, மத்திய விற்பனை வரி இனங்களில் ரூ.6,532.75 கோடி, தமிழ்நாடு பொது விற்பனை வரி இனங்களில் ரூ.4,107.85 கோடி என பல சட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது என்று தெரிவித்தார்.