கேரளா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட்,திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உமன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் உத்தரபிரதேசம் உள்ள கோசி தொகுதியில் சமாஜ்வாரி முன்னிலையில் உள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள துப்குரியில் ஆளும் திரிணாமுல் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்டில் ஆளும் ஜே எம் எம் கட்சி வேட்பாளர் பேபி தேவி வெற்றி பெற்றுள்ளார். திரிபுராவில் போக்சோநகர் மற்றும் தண்பூர் தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மகேஸ்வரர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டணியின் வெற்றி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.