பைஜூஸ் நிறுவனத்தின் தோற்றுநர் பைஜூ ரவீந்திரன், நிறுவனத்தின் மீதான தனது பங்கு மதிப்பை 40% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக, அவர், 15% பங்குகளை திரும்ப பெற உள்ளதாக கூறப்படுகிறது.
பைஜூஸ் நிறுவனம், கடந்த வருடத்தில் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்து வருகிறது. சுமார் 18 மாத தாமதத்திற்கு பின்னர், கடந்த செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் தனது வருவாய் கணக்குகளை வெளியிட்டது. அதன்படி, நிறுவனத்தின் இழப்பு 4588 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாயிலும் 48% சரிவு பதிவானது. அத்துடன், தனது கிளை நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் பைஜூஸ் நிறுவனம் இழப்புகளை சந்தித்து வருகிறது. அது மட்டுமின்றி, பல்வேறு கடன்களையும் பெற்று வந்துள்ளது. இந்த நிலையில், பைஜூ ரவீந்திரன் தனது 15% பங்குகளை திரும்ப பெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.