பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ஜுன் மோகன் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது பைஜூஸ் நிறுவனத்துக்கு மற்றும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது, தனது பதவியில் இருந்து விலகி, பைஜூஸ் நிறுவனத்துக்கு ஆலோசனை மட்டும் வழங்கும் வெளி உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து, நிறுவனத்திற்கான ஆலோசனைகளை அவர் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், தலைமை பொறுப்பிலிருந்து அவர் விலகியது பைஜூஸ் நிறுவனத்திற்கு மற்றும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இது பற்றி பேசிய பைஜூ ரவீந்திரன், “நிறுவனம் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. குறுகிய உறுப்பினர்களுடன் தொடர்ந்து செயல்படும்” என்று கூறியுள்ளார்.