தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாணயங்கள் மற்றும் அதைவிட சிறிய அளவில் தயாரிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு இந்த வரி உயர்வு சொல்லப்பட்டுள்ளது.
குறைந்த இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த குறிப்பிட்ட சில வணிகங்களில் முறைகேடுகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனை குறைப்பதற்காக, தேசிய மறைமுக வரிகள் ஆணையம் இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 15% ஆக இறக்குமதி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடிப்படை வரி 14.35% ஆகவும், செஸ் வரி 4.35% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டவிரோத தங்கம் மற்றும் வெள்ளி பரிமாற்றம் பெருமளவு குறையும் என கருதப்படுகிறது.