பைஜுஸ் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம்

February 3, 2023

இந்தியாவைச் சேர்ந்த பிரபல கல்வி சார்ந்த நிறுவனமான பைஜுஸ், 1000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் பைஜூஸ் நிறுவனம், செலவுகளை குறைக்கும் பொருட்டு பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம், பைஜூஸ் நிறுவனம், தனது 5% பணியாளர்களை […]

இந்தியாவைச் சேர்ந்த பிரபல கல்வி சார்ந்த நிறுவனமான பைஜுஸ், 1000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் பைஜூஸ் நிறுவனம், செலவுகளை குறைக்கும் பொருட்டு பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம், பைஜூஸ் நிறுவனம், தனது 5% பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தது. இது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2500 ஆகும். இந்நிலையில், தொடர்ச்சியாக பணி நீக்க அறிவிப்புகள் வெளியாவதால், நிறுவனத்தின் மொத்த ஆட்குறைப்பு கிட்டத்தட்ட 10,000 எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu