பைஜூஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் திங் அண்ட் லேர்ன் ஆகும். இந்த நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்று இருந்த ரஜனீஷ் குமார் மற்றும் மோகன்தாஸ் பாய் ஆகியோர் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் ரஜனீஷ் குமார் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் ஆகியோருடன் பைஜூஸ் தோற்றுநர் ரவீந்திரன் பைஜூ பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் இறுதியில், ஆலோசனைக் குழுவின் ஆயுட்காலம் நீடிக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் ஆலோசனைக் குழுவின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. எனவே, இருவரும் ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால், அதன் பிறகு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், பைஜூஸ் தோற்றுநர் அவர்களை தயக்கமின்றி அணுகலாம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.