சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப் 15 5ஜி கைபேசி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 வேரியண்ட்களில் வெளியாகி உள்ள இந்த கைபேசியின் விலை 12999 மற்றும் 14499 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஃப் 15 கைபேசி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படுகிறது. 4 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு ஆகிய 2 வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ளதால் அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கைபேசி, 6.5 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அத்துடன், 6000mah பேட்டரி திறன் 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.