பைஜூஸ் நிறுவனம் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கி உள்ளது. இதன் காரணமாக, நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உயர் பதவியில் உள்ள முக்கிய தலைவர்கள் பதவி விலகினர். தொடர்ந்து இதுபோன்ற எதிர்மறையான செய்திகளே பைஜூஸ் நிறுவனம் குறித்து வெளியாகி வந்தன. இந்த நிலையில், பைஜூஸ் நிறுவனம், தனது மொத்த கடன் மதிப்பான 1.2 பில்லியன் டாலர் தொகையை அடுத்த 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த உள்ளதாக அறிவித்து, கவனத்தை ஈர்த்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. அதை அடுத்த 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த உள்ளதாக பைஜூஸ் அறிவித்துள்ளது. அதில், 300 மில்லியன் டாலர்களை அடுத்த 3 மாதங்களில் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, கடன் வழங்கிய நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதற்கு பைஜூஸ் எடுத்து வரும் உத்திகள் குறித்து அந்த நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.