சீனாவை சேர்ந்த மெசேஜ் / குறுந்தகவல் செயலியான வீ சாட், கனடாவில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சாதனங்களில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்டி வைரஸ் நிறுவனமான Kaspersky ஐ பயன்படுத்துவது மிகவும் அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. அதனால், Kaspersky செயலிக்கும், சீனாவின் வீ சாட் செயலிக்கும் இனிமேல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சாதனங்களில் இருந்து இவை நீக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், கனடா தெரிவித்துள்ளது. முன்னதாக, இதே பாதுகாப்பு காரணங்களுக்காக, டிக் டாக் செயலியை கனடா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.