கனடா: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் தேர்தலில் களமிறங்கும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை

September 1, 2022

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தற்போதைய முதல்வர் ஜான் ஹோர்கன். புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் பதவி விலக உள்ளார். எனவே, மாகாணத்தின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜான் […]

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தற்போதைய முதல்வர் ஜான் ஹோர்கன். புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் பதவி விலக உள்ளார். எனவே, மாகாணத்தின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜான் ஹோர்கன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அவரது ஆட்சிக் காலம் நிறைவு பெறாத நிலையில், அவர் பதவி விலகுவதால், கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுபவரே முதல்வராகவும் இருப்பார். பின்னர், 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்குவார். எனவே, இந்த தேர்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது, மாகாணத்தின் வீட்டு வசதி, சட்டத்துறை அமைச்சர் டேவிட் எபி மற்றும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வரும் நவம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 3ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. சிறுவயது முதலே கனடாவில் வசிக்கும் அஞ்சலி அப்பாதுரை, பன்முகத் திறமைக் கொண்டவர். மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரங்குகளில் குரல் எழுப்பியவர். மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பது தொடர்பான திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகக் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu