கனரா வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் 18% உயர்ந்து 3757 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த நிகர வருவாய் வருடாந்திர அடிப்படையில் 11% உயர்ந்து 9580 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த 2024 ஆம் நிதி ஆண்டுக்கு, கனரா வங்கியின் ஒரு பங்குக்கு 16.1 ரூபாய் டிவிடெண்ட் வழங்க வங்கியின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கனரா வங்கியின் கேப்பிட்டல் அடிக்குவன்சி ரேஷியோ கடந்த காலாண்டில் 16.28% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியின் என்பிஏ 1.27% ஆகவும், வங்கியின் வாராக்கடன் அளவு 4.23% ஆகவும் குறைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில், உள்நாட்டு வைப்பு நிதியில் 11% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் கனரா வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 580 ரூபாய் அளவில் உள்ளது.