தமிழகத்தில் 219 மருந்து விற்பனை நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஒன்பது மாதங்களில் 219 மொத்த மற்றும் சிலரை மருந்து விற்பனை நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதால் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 381 மறந்து விற்பனையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மொத்த விற்பனை நிறுவனங்களுக்கு உரிமம் தற்காலிகமாகவும், அடிமை பழக்கம், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு விதி மீறலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














